Posts

பிரம்மஸ்ரீ வேதபுரி அவர்கள்

Image
ஸ்ரீ மஹாபெரியவா சரணம். மஹாபெரியவரால் பிரம்மஸ்ரீ என்று பட்டம் கொடுக்கப்பட்ட ஸ்ரீ வேதபுரி மாமா (பூர்வாஸ்ரம நாமம்) அவர்கள் பெரியவா சரணகமலங்களை அடைந்ததை அறிந்தபோது எழுந்த நினைவலைகள். பெரியவாளை உம்மாச்சி என்று அழைக்கும் சிறு பிராயத்திலேயே பெரியவா, சிறுவன் வேதபுரியைத் தனது கைங்கர்யம் செய்யும் குழுவில் சேர்த்துக்கொண்டார். மிகவும் வெகுளியான அந்தத்  தாயில்லாக் குழந்தையை ஒரு தாயின் பரிவோடு கவனித்துக்கொண்டார் பெரியவா. பெரியவரோடு சதா இருக்கும் பாக்கியம் பெற்ற அவர் வளர, அவருக்குத்  திருமணம் செய்து வைத்துப் பின்னர் அவரது குழந்தைகளின் திருமணத்தையும் நடத்திக்கொடுத்ததையெல்லாம் நாம் அறிகிறோம் (in  வீழித்திருநேரம் ). பெரியவரின் கடுமையான ஆசாரங்களுக்கு ஈடு கொடுத்துக்  கைங்கர்யம் செய்துள்ளார்,  மாமா.  சில வருடங்களுக்கு முன் பெரியவாளுக்கு கைங்கர்யம் செய்தவர்களைக் கௌரவித்த ஒரு நிகழ்ச்சியில், எனக்கு வேதபுரி மாமாவைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது அவருக்கு 90 வயதிருக்கும். அப்போது பேசுகையில்கூட அவர், பெரியவாளை உம்மாச்சி என்றே கு...